நகராட்சி மன்ற மைதான விஸ்தரிப்புக்காக காணிகளை கையகப்படுத்தல்

 

சாவகச்சேரி நகராட்சி மன்ற மைதான விஸ்தரிப்புக்கான காணி கையகப்படுத்தல் தொடர்பான பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி மன்றத்திற்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தின் விஸ்தரிப்பிற்கு இடவசதி போதுமானதாக இல்லாத நிலையில், மைதானத்திற்கு தெற்கு பக்கமாக உள்ள அண்ணளவாக 190 பரப்புக் காணியை விற்பனை செய்ய இருப்பதாக அறிந்தபோது, எனவே, எமது தேவையை பூர்த்தி செய்யும் முகமாக இக் காணியை இக்காணியை சுவீகரிப்பதன் மூலமாகவோ அல்லது கொள்வனவு செய்வதன் மூலமாகவோ கையகப்படுத்துவதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் எனவும்,

அத்துடன், நகரசபை சுகாதாரத் தொழிலாளர் விடுதிகள், வீடுகள் அமைந்து, பகுதி வெள்ள அனர்த்தத்தினால் அடிக்கடி பாதிக்கப்படுவதால், தேவைக்கு மேலதிகமான காணி இருக்கும் பட்சத்தில் எதிர் காலத்தில் சுகாதாரத் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு தேவையினையும் பூர்த்தி செய்ய முடியும் எனவும்,

எனவே இக்காணியை கையகப்படுத்தல் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கும்படி திருமதி.பவுலினா சுபோதினி தயாளராசன், கெளரவ உறுப்பினர் இலங்கை தமிழரசுக்கட்சி பிரேரணை ஒன்றை வழங்கியிருந்தார்.

கௌரவ உறுப்பினர் திருமதி. பவுலினா சுபோதினி தயாளராசன் அவர்களால் கொண்டுவரப்பட்ட மேற்படி பிரேரணையானது நகராட்சி மன்றத்தின் விளையாட்டு மைதானத்தின் விஸ்தரிப்புக்காகவும் அதன் தேவைக்காகவும் சுவீகரிப்பின் மூலம் பெற்றுக்கொள்வதென ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. ஆதனங்களை வெளியாட்கள் கொள்வனவு செய்வதற்கு அனுமதிக்கக்கூடாது எனவும் அவ்வாறு கொள்வனவு செய்யப்படுவதனை தெரியப்படுத்தினால் ஆட்சேபனை தெரிவிக்கவேண்டும் எனவும் கௌரவ உறுப்பினர் திரு. இரத்தினம் யோகநாதன் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.

தென்மராட்சி மக்களின் நீண்டகால தேவைகளையும், இளைஞர்களின் விளையாட்டுத்துறை வளர்ச்சியையும் கருத்திற்கொண்டு, தென்மராட்சி அபிவிருத்தி தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில், கடந்த 03.06.2026 DDC கூட்டத்தின் போது தென்மராட்சிக்கான உள்ளக விளையாட்டரங்கம் மற்றும் நீச்சல் தடாகம் அமைப்பதற்காக ரூ.125 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே அதற்கு பொருத்தமான இடவசதியும் தேவையாக உள்ளது.
இந்த செய்தியை பகிரவும்

கருத்துரையிடுக

புதியது பழையவை