நகர சபை ஏன் மரத்தை தறிக்கிறது ; காகம் எச்சமிடுதல் தான் பிரச்சனையா

 

சாவகச்சேரி சந்தைத் தொகுதியில் LDSP திட்டத்துக்கு உலக வங்கி மூலம் நிதிகிடைக்கப்பெற்றபோது, புதிய கட்டடம் அமைக்க இடத்தை தெரிவு செய்தபோது அருகில் மரம் ஒன்று இருந்தது, அது வெட்டப்படக்கூடாது என்பது, உலகவங்கி அதிகாரிகளின் முடிவாக இருந்தது, அவ்வாறே கட்டடம் திட்டமிடப்பட்டது.

அண்மையில் சபையின் உறுப்பினர் மரம் அகற்றப்படவேண்டும், கடையை மரம் மறைக்கிறது என முன்மொழிகிறார், அதற்கு காகமும் எச்சமிடுகிறது என வழிமொழிகிறார்கள். விரைவில் அந்த மரம் அடியோடு வெட்டப்படப்போகிறது.

சாவகச்சேரி நகராட்சி மன்றத்தினால் பிரதேச அபிவிருத்தி உதவித்திட்டத்தின் (LDSP) கீழ் அமைக்கப்பட்ட கடைகளை நீண்டகாலக் குத்தகைக்கு வழங்குவதற்காக 2024ஆம் ஆண்டில் பகிரங்கக் கேள்வி மனுக்கள் கோரப்பட்டன. இக் கோரலில் கடை இலக்கம் LDSP/PT3/01-03 மற்றும் 06-08 வரையான 6 கடைகளுக்கான ஆகக் குறைந்த கேள்வித் தொகை (இதர வரிகள் தவிர) ரூபா 2,160,000.00 ஆகவும், அவற்றின் மாத வாடகை ரூபா 9,000.00 ஆகவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதேவேளை, கடை இலக்கம் LDSP/PT3/04 மற்றும் 05 ஆகிய இரு கடைகளுக்கான ஆகக் குறைந்த கேள்வித் தொகை (இதர வரிகள் தவிர) ரூபா 1,800,000.00 ஆகவும், அவற்றின் மாத வாடகை ரூபா 7,500.00 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.

இக் கடைத்தொகுதியானது ஆரம்பத்தில் வீதியை முகப்பாகக் கொண்டு திட்டமிடப்பட்டு அமைக்கத் தொடங்கப்பட்ட போதிலும், பின்னர் உட்பக்கமாக மாற்றியமைக்கப்பட்டது. மேலும், 04 மற்றும் 05 ஆம் இலக்கக் கடைகளுக்கு முன்னால் அமைந்திருந்த மரத்தினை வெட்டக்கூடாது என பிரதேச அபிவிருத்தி உதவித்திட்ட அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைவாக, அக்கடைகள் நீளம் குறைவாகக் கட்டி முடிக்கப்பட்டமையினாலேயே அவற்றுக்கான கேள்வித் தொகையும் மாத வாடகையும் ஏனைய கடைகளை விடக் குறைவாகக் காணப்பட்டது. அக்காலப்பகுதியில் மரம் ஒன்றைப் பாதுகாப்பதற்காக அதிக கவனம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இக் கேள்விகோரலின் அடிப்படையில் நீண்டகாலக் குத்தகைக்கு குறித்த கடைகளைப் பெற்றுக்கொண்டவர்கள் ரூபா 4,100,000.00 மற்றும் ரூபா 5,000,000.00 போன்ற தொகைகளுக்கு அவற்றைக் கைப்பற்றியுள்ள அதேவேளை, கடை இலக்கம் LDSP/PT3/03 றிற்கு தொகையாக ரூபா 12,560,000.00 மன்றத்திற்குப் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.


குத்தகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஏற்கனவே மரம் இருப்பது தெரிந்து தான் விண்ணப்பித்துள்ளா அதே வேளை இவற்றை கருத்தில் கொள்ளாது சபையினர் இயங்க முயல்வது பல விமர்சனங்களை ஏற்படுத்துகின்றது.
இந்த செய்தியை பகிரவும்

கருத்துரையிடுக

புதியது பழையவை