நகரசபை உபதவிசாளர் நீக்கம்: என்ன நடந்தது





வியாபார உரிமம் வழங்குதல் மற்றும் வியாபார வரி அறவிடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் பொழுது குறித்த வணிக நிறுவனங்கள் குடிபுகுச் சான்றிதழினை பெற்றுக்கொண்டுள்ளமையை உறுதிப்படுத்துமாறு கோரி அனைத்து நகரசபை பிரதேசசபைகளுக்குமான கடிதம்/சுற்றுநிருபம் அனுப்பப்படுகின்றது.

தவிசாளர்/செயலாளர்
நகரசபை/பிரதேசசபை.

வணிக நிறுவனங்களுக்கான இசைவுச் சான்றிதழ் / குடிபுகு சான்றிதழ் (COC)
உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார எல்லைக்குள் மேற்கொள்ளுகின்ற எந்தவொரு வகையிலுமான கட்டுமானங்கள் மேற்கொள்வதற்கு முன்னர் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளுதல் கட்டாயமானதாகும்.

கட்டட அனுமதிப்பத்திரத்துடன் மேற்கொள்ளப்படுகின்ற கட்டுமானங்கள் அங்கீகரிக்கப்பட்ட திட்டம் மற்றும் அதற்கு ஏற்புடையதான அனுமதிப்பத்திரத்தில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு அமைவாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதனை உறுதிப்படுத்தி கட்டட விண்ணப்பதாரருக்கு உள்ளூராட்சி மன்றங்களால் வழங்கப்படுகின்ற சான்றிதழ் குடிபுகுச் சான்றிதழ் ஆகும்.

குடிபுகுச் சான்றிதழ் பெற்றுக்கொள்வதற்கு முன்னர் உரிய கட்டிடம் வசிப்பிடத்திற்கு அல்லது வேறு பணிக்கு அல்லது அபிவிருத்தி தேவைக்கு கட்டட விண்ணப்பதாரரினால் பயன்படுத்தப்படக் கூடாது.

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார எல்லைக்குள் கட்டப்படும் வணிக நிறுவனங்கள், சிற்றுண்டிச்சாலை, உணவகம், தேநீர்க்கடை, கோப்பிக்கடை மற்றும் இவை ஒத்தக்கட்டடங்கள், ஹோட்டல்கள், விடுதிகள், பொதுநோக்கு மண்டபங்கள், தொழிற்சாலைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களால் வியாபார வரி மற்றும் வியாபார அனுமதிப்பத்திரம் வழங்குகின்ற, கட்டடங்களுக்கான குடிபுகுச் சான்றிதழினை (COC) பெற்றுக்கொள்ளாமலே குறித்த நிறுவனங்கள் தங்களது செயற்பாடுகளை ஆரம்பிப்பதுடன், குறித்த நிறுவனங்களுக்கு உள்ளூராட்சி மன்றங்களால் வியாபார உரிமம் மற்றும் வியாபார வரி அறவிடும் செயற்பாடுகளை மேற்கொள்கின்றமை சார்பாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

எனவே தங்களின் அதிகார எல்லைக்குள் காணப்படும் மேற்படி நிறுவனங்களுக்கு வியாபார உரிமம் வழங்குதல் மற்றும் வியாபார வரி அறவிடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் பொழுது குறித்த வணிக நிறுவனங்கள் குடிபுகுச் சான்றிதழினை பெற்றுக்கொண்டுள்ளமை தொடர்பான ஆவணங்களினைப் பெற்று பரிசீலித்து, குடிபுகுச் சான்றிதழினை பெற்றுக்கொண்டுள்ள நிறுவனங்களுக்கு மட்டும் வியாபார உரிமம் மற்றும் வியாபார வரி அறவிடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

2026 ஆம் ஆண்டு தொடக்கம் இந்நடைமுறைக்கு அமைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளவதுடன் குடிபுகுச் சான்றிதழினை (COC) பெற்றுக்கொள்ளாது வியாபார உரிமம், வியாபார வரி அறவிட்டுக்கொள்ளும் நிறுவனங்களுக்கான வியாபார உரிமத்தை இரத்து செய்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் தங்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையிடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

என உள்ளூராட்சி ஆணையாளரின் 05.11.2025 திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றை 06.11.2025 நகரசபை பெறுகிறது. அது தொடர்பான விவாதம் 20.01.2026 இல் நடைபெறுகின்றது.





இந்த செய்தியை பகிரவும்

கருத்துரையிடுக

புதியது பழையவை